தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இவர் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. 

Makkal Selvan Vijay Sethupathis Super Delux Movie Trailer Released In Thyagaraja Kumararaj Direction

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் மலையாள படத்தின் பிரபல ஹீரோ ஃபஹத் ஃபாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Makkal Selvan Vijay Sethupathis Super Delux Movie Trailer Released In Thyagaraja Kumararaj Direction

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. சமீபத்தில் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அசத்தியது. தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது.

Makkal Selvan Vijay Sethupathis Super Delux Movie Trailer Released In Thyagaraja Kumararaj Direction