தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் நடிகர் மற்றும் இயக்குனரான சேரன். இவர் கடைசியாக இயக்கிய படம் JK எனும் நண்பனின் வாழ்க்கை. 

சமீபத்தில் இவர் இயக்கத்தில் மக்கள் செல்வன் நடிக்கிறார் என்ற செய்தி திரை ரசிகர்களுக்கு இனிப்பூட்டும் வகையாக அமைந்தது. தற்போது சேரன் இயக்கி நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்டார் விஜய்சேதுபதி. இப்படத்திற்கு திருமணம் என பெயரிடப்பட்டது.

Makkal Selvan Vijay Sethupathi Releases The Title Of Cherans Movie

இப்படத்தில் நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி ராமய்யா நடிக்கிறார். பிரேம்நாத் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.