சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. 

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. இவ்விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொள்ள ஒகேனக்கல் பகுதியில் இருந்து சென்னைக்கு வர தனிவிமானம் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்து தரப்பட்டது.

தனது அடுத்தடுத்த படப்பணிகளில் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி. நிகழ்ச்சிகளை தவற விடாமல் சரியாக செயல்பட்டது சமகால நடிகர்களுக்கு எடுத்துகாட்டாய் திகழ்கிறது.