லைக்கா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சாயிஷா மற்றும் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் காப்பான் என புத்தாண்டு அன்று பெயரிடப்பட்டு, இதன் முதல் லுக் வெளியானது. சூர்யாவின் மாஸான கெட்டப் கொண்ட முதல் லுக் போஸ்டர் அனைவரையும் ஈர்த்து வருகிறது. 

Kaapan Shoot Update Featuring Surya With Actor Arya And Mohanlal

தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், காப்பான் படத்தின் படப்பிடிப்பு 20-ம் தேதியிலிருந்து சென்னை YM ஸ்டுடியோஸில் துவங்கவுள்ளது என நெருங்கிய திரை வட்டாரங்கள் மூலம் செய்திகள் தெரியவந்தது.

Kaapan Shoot Update Featuring Surya With Actor Arya And Mohanlal

நேற்று வெளியான NGK படத்தின் டீஸர் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வரும் நிலையில் காப்பான் படத்தின் அப்டேட் வந்தது சூர்யா ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

Kaapan Shoot Update Featuring Surya With Actor Arya And Mohanlal