சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி தீபாவளியன்று வெளியான படம் சர்க்கார்.     

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகிபாபு, ராதா ரவி, பழ. கருப்பையா ஆகியோர் தளபதி விஜயுடன் இணைந்து நடித்து அசத்தியிருந்தனர். சர்க்கார் திரைப்படத்தில் சர்ச்சை கூறிய காட்சிகளை நீக்கியதன் மூலம் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு சாதனை படைத்து வருகிறது.   

இந்திய கிரிக்கெட் வீரரான பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், வோர்ல்டு மொத்தமும் அரளவுடனும் பிஸ்து பிசுறு கெளப்பி பெர்ளவுடனும் பல்து என்று பதிவிட்டிருக்கிறார்.   

அனைவரையும் கவர்ந்த இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். மேலும் இப்பாடல் துவக்குத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றது. நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் ஹர்பஜன் விக்கெட் வீழ்த்திய பிறகு சிம்டங்காரன் ஸ்டேப்பில் நடனம் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Indian Cricket Player Harbajan Singh Recent Tweet Mentioning Simtangaaran Song Lyric  

சென்னை தொனியில் அமைந்துள்ள வரிகள் இசை விரும்பிகளை மிகவும் ஈர்த்தது. இசைபுயல் இசையமைத்த இப்பாடலை பம்பா பாக்யா, விபின் அனேஜா மற்றும் அபர்ணா நாராயணன் போன்ற பாடகர்கள் பாடியுள்ளனர்.