பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பல துறைகளில் கவனம் செலுத்தி அதில் வெற்றி பெற்றும் வருபவர் ஹிப்-ஹாப் தமிழா ஆதி. இளைஞர்கள் மத்தியில் பெரும் ரசிகர்களை பெற்ற ஆதியின் ஒவ்வொரு படைப்பும் சமூக கருத்துக்களை கொண்டதாக விளங்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு சுந்தர்.சி தயாரிப்பில் மீசைய முறுக்கு எனும் படத்தில் ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருப்பார். இதையடுத்து ஹிப்-ஹாப் ஆதியின் அடுத்த படம் நட்பே துணை. விளையாட்டை மைய்யமாக கொண்ட இப்படம் பிப்ரவரி 14 2019 வெளிவரவிருக்கிறது.

தற்போது இப்படத்தின் முதல் பாடலான Kerala Song வரும் டிசம்பர் 14-ஆம் தேதி வெளியாகிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் ஆதியின் ரசிகர்கள்.