'தமிழ் சினிமா' பல்வேறு கலை திறமைகளை கண்டெடுத்த காவிய தாய். கனவுகளை துரத்தும் சராசரி மனிதனாய் நுழைந்து சாதனையாளராக மாறியிருக்கும் ஒளிப்பதிவாளர் 'விது அய்யன்னா'வின் திரை பயணம் பற்றிய பதிவு தான் இது.நாம் விரும்பும் நடிகர்களை அவரது மூன்றாம் கண்(கேமரா) பார்வையின் மூலம் படம்பிடித்து விழிகளுக்கு விருந்தளிக்கும் பணியை செய்யும் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் இவரும் ஒருவர். கலாட்டா நிருபர் சக்தி பிரியன் உடன் நடந்த சிறப்பு பேட்டியின் போது இவர் கூறிய சுவாரஸ்யமான பதில்கள் இதோ...

Galatta Special Article About Cinematographer Vidhu Ayyana Who Worked For Meyadha Maan And LKG

கேமரா காதலன் ஆனது எப்போது ? 

சிறுவயது முதல் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருந்தது. ஆர்வத்தை கடுகளவு வைத்துகொள்ளாமல் கடலளவு பரப்பிக்கொண்டு, அதை நோக்கி சரியான பாதையில் பயணிக்கத்துவங்கினேன். கேமரா மீது இருந்த காதலுடன், சென்னையில் உள்ள கல்லூரியில் Bsc VisCom படிப்பை ஆர்வத்துடன் கற்றுத்தேர்ந்தேன். ஒளிப்பதிவு எனும் விதை மிகப்பெரிய மரமாக மாறியது இங்குதான் என்றே கூறலாம்.

உங்கள் திரை பயணம் பற்றிய பிளாஷ்பாக்...

ஆரம்பத்தில் சிறு சிறு விளம்பர படங்கள். பிறகு பிரபல இணையதள வீடியோ தொகுப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தினேன், அதன்பின் பெரிய திரைக்கான பயிர்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். சரியான ஆசிரியரிடம் முறையான பயிற்சி மேற்கொள்ள விஜய் மில்டனுடன் சேர்ந்து பணியாற்ற துவங்கினேன். அதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டதால் வழக்கு எண் 18/9 படத்தில் பணிபுரியும் வாய்ப்பு அமைந்தது, அதைதொடர்ந்து மேயாத மான் படம் என்னை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

LKG பட வாய்ப்பு எப்படி அமைந்தது ?

திரை துறையில் மிகப்பெரிய உச்சத்தை எட்டியவுடன், திறமை உள்ள பிறரையும் வளர்த்து விட வேண்டும் என்று நினைப்போர்கள் ஒரு சிலர் மட்டுமே. அப்படி ஒரு சிலரில் ஒருவர் தான் ரேடியோ ஸ்டார் RJ பாலாஜி. நான் முன்பு செய்த சீரான பணிகளை கண்டவுடன் சில நண்பர்கள் எனது பெயரை பரிந்துரைக்க சற்றும் யோசிக்காமல் படத்தில் வாய்ப்பளித்து அழகு பார்த்தார். LKG பற்றி பேச ஆரம்பித்தால் முதலில், பாலாஜியின் ஸ்கிரிப்ட் எழுதும் திறன் குறித்து தான் பேச வேண்டும். ஸ்பாட்டில் ஸ்பான்டேனியஸாக இருக்கும் பாலாஜியின் நடிப்புக்கு ஏற்றவாறு சக நடிகர்களும் நடித்தனர்.       (சிரித்தபடி)

Galatta Special Article About Cinematographer Vidhu Ayyana Who Worked For Meyadha Maan And LKG

கார்த்திக் சுப்பராஜ் உடன் மறக்க முடியாத பராக் நிகழ்வு ஏதாவது ? 

மேயாத மான் படத்தில் எனது கேமரா பணியை கண்ட கார்த்திக் சுப்பராஜ், சிறிய இடத்தில் ஃபிரேம் அமைக்கும் முறையை பாராட்டினார். மேலும் அந்த படத்தில் எங்கெங்கு காமெடி காட்சிகள் பொருத்தலாம், ஆடியன்ஸின் நாடித்துடிப்பறிந்து ஐடியாக்களை அல்லி வீசினார் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ். படத்தின் இயக்குனர் ரத்னகுமார், இயக்குனர் என்பதை கடந்து சிறந்த நண்பனாக இன்று வரை விளங்குகிறார்.

LKG படத்திற்கென மேற்கொண்ட மெனக்கெடுதல் என்ன ? 

ஹோம் ஒர்க், டெஸ்ட் ஷூட், ஆடிஷன் அதெல்லாம் எதுவுமே இல்லை. பாலாஜி ஏற்கனவே எழுதியிருக்கும் ஸ்கிரிப்ட்டை சரியாக நடித்து அசால்ட் செய்வார். JK ரித்தீஷ் மற்றும் நாஞ்சில் சம்பத் படப்பிடிப்பு தளத்தில் வெகுளியாக நடந்து கொள்ளும் முறை செட்டில் இருக்கும் அனைவரையும் ஈர்த்தது. மேலும் இயக்குனர் பிரபு அளித்த முழு சுதந்திரம் காட்சிகளை சிறப்பாக ஒளிப்பதிவு செய்ய உதவிகரமாய் இருந்தது.

Galatta Special Article About Cinematographer Vidhu Ayyana Who Worked For Meyadha Maan And LKG

 LKG படத்திற்கு ஏதாவது ஹோம்ஒர்க் பணிகள் மேற்கொண்டீர்களா ? 
 
ஹோம் ஒர்க், டெஸ்ட் ஷூட், ஆடிஷன் அதெல்லாம் ஒன்னும் இல்லை. பாலாஜி ஏற்கனவே எழுதியிருக்கும் ஸ்கிரிப்ட்டை சரியாக நடித்து அசால்ட் செய்வார். JK ரித்தீஷ் மற்றும் நாஞ்சில் சம்பத் படப்பிடிப்பு தளத்தில் வெகுளியாக நடந்து கொள்ளும் முறை செட்டில் இருக்கும் அனைவரையும் ஈர்த்தது. மேலும் இயக்குனர் பிரபு அளித்த முழு சுதந்திரம் காட்சிகளை சிறப்பாக ஒளிப்பதிவு செய்ய உதவிகரமாய் இருந்தது. 
 
 

சினிமா நண்பர்கள் பற்றி ? சந்திக்கிறப்போ அதிகமா பேசுற டாப்பிக் ? 

சினிமா வட்டார நண்பர்கள் ஏராளம். படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்தாலும், கிடைக்கும் நேரத்தில் நண்பர்களை பார்ப்பது வழக்கம். மேயாத மான் படத்தின் இயக்குனர் ரத்ன குமார் மிக கிளோஸ். மெர்சல் ஒளிப்பதிவாளர் GK விஷ்ணுவை சமீபத்தில் சந்தித்தேன். தளபதி 63 அப்டேட்ஸ் ஏதாவது கிடைக்குமா என்று கேட்டதற்கு எனக்கே எதுவும் சொல்லல விஷ்ணு. பிறகு நாங்கள் சந்திக்கும் போது நடிகர்கள், படம் பற்றி பேசமாட்டோம். தொழில் சார்ந்து உபயோகிக்கும் கேமரா வகை குறித்து தான் அதிகம் பேசுவோம். மேலும் எம்மாதிரியான லைட்டிங் என்பது பற்றி கலந்துரையாடுவோம்.

மாநகரம் பட புகழ் லோகேஷ் கனகராஜ் நெருங்கிய நண்பர், தற்போது நடிகர் கார்த்தி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேலையில் பிஸியாக இருப்பதால் சந்திக்க நேரம் கிடைப்பதில்லை. படம் நல்லா வந்துட்டு இருக்குனு லோகேஷ் கூறினார். எங்க கேங்ல பிரபல குறும்பட புகழ் இயக்குனர் மடோன் அஷ்வின் வெற்றியை காண நண்பர்கள் அனைவரும் காத்திருக்கிறோம்.

LKG-ல் உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ?

ஒருபோதும் அப்படி எண்ணவில்லை. நிச்சயம் விஜய் அஜித் போன்ற உச்ச நடிகர்களால் இக்கதையை ரசிகர்களிடையே கொண்டு சேர்க்க முடியாது. காரணம் முழு நீல காமெடியான கதை. அதில் சில தரமான கருத்துகள். மேலும் RJ பாலாஜியே எழுதியதால், செயல்படுத்தும் முறை எளிமையாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பாலாஜி கதாநாயகர் என்பதை தாண்டி சராசரி சாமானிய மனிதர் போல் இருப்பார். அவரை தவிர்த்து வேறு யாராவது டாப் ஹீரோ நடித்திருந்தால், அதற்கு ஏற்றவாறு கதையை மாற்றி எழுத நேர்ந்திருக்கும்.

பேட்ட படத்தில் மேயாத மான் பாத்திரம் இடம்பெற்றது எப்படி இருந்தது ?

மிக பெரிய சர்ப்ரைஸ் அது. கார்த்திக் சுப்பராஜ் சார் எதுவும் சொல்லவே இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினி வைத்து தனது ட்ரீம் ப்ராஜெக்ட்டை எடுக்கிறார். அதில் இந்த காட்சியை சேர்த்திருப்பார் என்று நினைக்கவில்லை. பார்த்த எனக்கும், ரத்னாவிற்கும் மிகுந்த மகிழ்ச்சி. ஆடியன்ஸும் இதயம் முரளி கேரக்டர் வருகையில் நல்ல ரெஸ்பான்ஸ் அளித்தனர்.

இந்த விஷயத்துக்கு LKG படத்தை பார்க்கலாம் என்றால், எதை கூறுவீர்கள் ? 

காமெடியா இருக்கும் போய் பாருங்க என்பதை தாண்டி ஜனங்களின் மணநிலையோடு ஒத்துபோகும் ஒரு படமாக LKG இருக்கும். பொதுவாக RJ பாலாஜியை அனைவருக்கும் பிடிக்கும், எந்த அளவிற்கு நகைச்சுவை தன்மை உள்ளவரோ அதற்கு சரிசமமாக சமுதாய அக்கறை உள்ள மனிதர். திரைக்கும் ரசிகர்களுக்கும் உள்ள தூரத்தை நிச்சயம் பாலாஜி குறைப்பார் என்றே கூறலாம். படம் முடிந்து வெளியே வரும் தருணத்தில் திருப்தியுடன் வருவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

நாஞ்சில் சம்பத்தின் நாவில் தமிழ் சரளமாக தாண்டவமாடும் ! அவரை பற்றி சில வார்த்தைகள்

மிகச்சிறந்த ஒரு மனிதர். பிறந்த குழந்தை உலகை எப்படி பார்க்குமோ அது போல் சினிமாவை முதன்முறையாக பார்த்தார். அரசியல் பிரபலம் என்ற பந்தா லாம் சற்றும் இல்லை. அவரது வெகுளிதனமான குணத்தை ரசிக்காதோர் ஷூட்டிங்கில் யாரும் இருக்க முடியாது.

இது தான் என்னுடைய ட்ரீம் ப்ராஜெக்ட் என்று ஏதாவது இருக்கா ?

நான் விரும்பி செய்யும் இந்த ஒளிப்பதிவு பணியில் அனைத்து படைப்புகளும் எனது ட்ரீம் ப்ராஜெக்ட் தான். 

Galatta Special Article About Cinematographer Vidhu Ayyana Who Worked For Meyadha Maan And LKG

மனதில் பதியும்படி காட்சியமைப்புகளை ஒளிப்பதிவு செய்து விழிகளுக்கு விருந்தளிக்கும் இந்த கலைஞன் விது அய்யன்னாவின் பணியை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா. சிறந்த ஒளிப்பதிவாளர்கள் பட்டியலில் இவரும் இடம்பெற்று ஃபோகஸ் ஆக சினிமா விரும்பிகள் சார்பாக வாழ்த்துகிறோம்.

அரசியல் பிரபலம் நாஞ்சில் சம்பத்தின் பேச்சுக்கள் கேட்காதோர் யாரும் இருக்க இயலாது. அவரது நாவில் தமிழ் தாயே குடியிருக்கிறாள் என்று கூறலாம். அந்த அளவிற்கு சொல்லின் செல்வராக சிறந்த பேச்சாளராக இருந்தவர், திரையில் இயல்பான டயலாக் பேசி எப்படி நடித்தார் ? 
 
மிகச்சிறந்த ஒரு மனிதர். பிறந்த குழந்தை உலகை எப்படி பார்க்குமோ அது போல் சினிமாவை முதன்முறையாக பார்த்தார். அரசியல் பிரபலம் என்ற பந்தா லாம் சற்றும் இல்லை. அவரது வெகுளிதனமான குணத்தை ரசிக்காதோர் ஷூட்டிங்கில் யாரும் இருக்க முடியாது. 
அரசியல் பிரபலம் நாஞ்சில் சம்பத்தின் பேச்சுக்கள் கேட்காதோர் யாரும் இருக்க இயலாது. அவரது நாவில் தமிழ் தாயே குடியிருக்கிறாள் என்று கூறலாம். அந்த அளவிற்கு சொல்லின் செல்வராக சிறந்த பேச்சாளராக இருந்தவர், திரையில் இயல்பான டயலாக் பேசி எப்படி நடித்தார் ? 
 
மிகச்சிறந்த ஒரு மனிதர். பிறந்த குழந்தை உலகை எப்படி பார்க்குமோ அது போல் சினிமாவை முதன்முறையாக பார்த்தார். அரசியல் பிரபலம் என்ற பந்தா லாம் சற்றும் இல்லை. அவரது வெகுளிதனமான குணத்தை ரசிக்காதோர் ஷூட்டிங்கில் யாரும் இருக்க முடியாது.