இயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான தேவி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இதே கூட்டணியில் லக்‌ஷ்மி எனும் படம் வெளியானது. இந்நிலையில், தேவி படத்தின் இரண்டாம் பாகமான தேவி 2 படத்தை இயக்கி வருகிறார் விஜய். 

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மொரீஷியஸ் நாட்டில் நடைபெற்றுவருகிறது என்ற தகவல் வெளியானது. தேவி 2 படத்தில் தமன்னாவோடு சேர்ந்து நித்யா மேனன் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். மேலும், கோவை சரளா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார். தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது. நிச்சயம் முதல் பாகம் போலவே இதுவும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.