EXCLUSIVE : SK 15 குறித்த சுவாரஸ்ய தகவல் !
By Sakthi Priyan | Galatta | January 19, 2019 13:02 PM IST
இரும்புத்திரை புகழ் இயக்குனர் PS மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படம் SK 15. இளைஞர்களின் இன்ஸ்பிரஷன் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் பேசப்பட்டு வருகிறது.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கத்தி படத்தின் சினிமாட்டோஃக்ராபர் ஜார்ஜ் பணியாற்றுகிறார். தளபதி 63 படத்தின் எடிட்டர் ரூபனும் உள்ளார்.
தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், மார்ச் மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாம். கதையை பட்டை தீட்டி வருகின்றனர் படக்குழுவினர்.