இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் என்றழைக்கப்படும் தமிழ் சினிமாவின் சென்சேஷனான சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே 13 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். 

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, சதீஷ், ராதிகா, தம்பி ராமைய்யா ஆகியோர் நடித்துவருகின்றனர். இப்படத்திற்கு ஹிப்-ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

இப்படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்புக்காக அசர்பைஜான் சென்றிருந்தனர் படக்குழுவினர். சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா கொண்ட இப்பாடல் காட்சியை சிறப்பாக எடுத்திருப்பார் ராஜேஷ் என்று பேசப்படுகிறது. அங்குள்ள ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா.

தற்போது அசர்பைஜானிலிருந்து சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா சென்னைக்கு விரைந்தனர். மேலும் இறுதிகட்ட படப்படிப்பை சென்னியில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.