தமிழ் திரையுலகில் நல்ல நடிகரை தாண்டி நல்ல மனிதராகவும் விளங்குபவர் நம் தல அஜித்குமார். இவரை ஆலோசகராக கொண்ட சென்னை மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கல்லூரி மாணவர்கள் குழு உருவாக்கிய தக்ஷா என்ற ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் பங்கேற்று உலக நாடுகளுக்கு சவால் விட்டது. மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான என்ற போட்டி நடத்தப்பட்டது.

Thala Ajith Mentored Daksha Team Bagged Three Medals In Drone Olympics

உலகெங்கிலும் இருந்து 55 நாடுகளிலிருந்து ஆளில்லா சிறிய விமானங்கள் இப்போட்டியில் பங்கேற்றன. அதில் 11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. சமீபத்தில் நடிகர் அஜித்தை தொழில்நுட்ப ஆலோசகராக கொண்ட மாணவர் குழு விமானம் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்தது.

Thala Ajith Mentored Daksha Team Bagged Three Medals In Drone Olympics

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மைய்யம் அஜித்தின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தக்க சமயத்தில் உதவிய அஜித்துக்கும், அவரது ஆலோசனைக்கும் நன்றி தெரிவித்துள்ளது. ஆளில்லா விமான தயாரிப்பு திட்டம் முழுமையாக முடிந்து விட்டதாகவும், அஜித்தின் பங்களிப்பு மேலும் தேவை என்றும் அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்டது சில நாட்கள் முன்பு பெரும் செய்தியாய் திகழ்ந்தது.

Thala Ajith Mentored Daksha Team Bagged Three Medals In Drone Olympics

தற்போது ட்ரோன் ஒலிம்பிக்ஸில் தக்ஷா குழு ஒரு தங்கப்பதக்கமும் இரண்டு வெள்ளி பதக்கமும் பெற்று அசத்தியிருக்கினர். வருங்காலத்தில் இக்குழு பெரிதளவில் சாதனை புரிய கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம். மேலும் மாணவர்களுக்கு சரியான நேரத்தில் அலோகசகராய் விளங்கிய அஜித்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறது கலாட்டா.