2018-ம் ஆண்டு தமிழ் சினிமா துறை தனக்கென ஒரு பாதையை வழிவகுத்த ஆண்டு என்றே கூறலாம். அதிக படங்கள் அசராமல் வெளியாகி ரசிகர்களுக்கு திரை விருந்தளித்தது. இதன் மூலம் பல புதிய இயக்குனர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்களை கண்டெடுத்தது தமிழ் சினிமா.

அறிமுகமான முதல் படத்திலேயே தங்களது திறனை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ள மேடை தான் இந்த கலாட்டா விருதுகள். கலை தாகம் உள்ள அறிமுக கலைஞர்களுக்கு இவ்விருதினை அளித்து அங்கீகரித்து அழுகு பார்த்தது கலாட்டா.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.இதில் கலந்ந்துகொண்ட சிவகார்த்திகேயனுக்கு சிறந்த அறிமுக தயாரிப்பாளருக்கான விருதை சீயான் விக்ரம் வழங்கினார்.அப்போது சிவகார்த்திகேயன்,விக்ரம் இருவரும் மாறி மாறி செம்ம ஜாலியாக பேச கலாட்டா விருது மேடை கலகலப்பானது.அந்த முழு வீடியோ இதோ