களைகட்டுகிறது STR-ன் மாநாடு ! கதையை கேட்டு வியந்த எடிட்டர் !
By Sakthi Priyan | Galatta | December 17, 2018 16:49 PM IST
நடிகர் சிம்பு ப்ளூப்பர் புகழ் இயக்குனர் வெங்கட் பிரபு இணையும் படத்தின் தலைப்பு மாநாடு என அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிப்பதாக செய்திகள் பரவிவந்தது.
எப்போதும் தனது எதார்தமான கருத்தை மைய்யமாக வைத்து படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்தில் அரசியல் கலந்த கமர்ஷியல் கருத்தை கதையில் வைத்து எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இப்படம் குறித்து தேசிய விருது பெற்ற எடிட்டரான பிரவீன் தனது ட்விட்டரில், மாநாடு படத்தின் கதையை கேட்டவுடன் அசாதாரணமாகவும், அற்புதமாகவும் உள்ளது என பதிவிட்டிருக்கிறார். நிச்சயம் இப்படம் STR திரைப்பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
Just heard a freaking brilliant meta script from @vp_offl for #maanadu super excited!!!! My head is still 🙃🌀🙃🌀🌀🙃🌀 sir!! Awesome and extraordinary!!! Kili 👌👌👌 #timewaitsfornone #vp09 @subbu6panchu
— Editor PraveenKl (@Cinemainmygenes) December 17, 2018