தமிழ்,தெலுங்கில் தனது முத்திரையை பதித்த பிறகு அடுத்ததாக புதிய மொழிகளில் களமிறங்க தயாராகிறார் தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா.இவர் நடித்து வரும் படம் Dear Comrade .இந்த படத்தில் ஹீரோயினாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

Vijay Deverakonda Rashmika Mandanna Starrer Dear Comrade Movie Update

ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Vijay Deverakonda Rashmika Mandanna Starrer Dear Comrade Movie Update

இந்த படம் ஜூலை மாதம் 26ஆம் தேதி நான்கு மொழிகளிலும் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட பாதிப்புகளுக்கான டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார் இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Vijay Deverakonda Rashmika Mandanna Starrer Dear Comrade Movie Update