பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான படம் பாய்ஸ். தமிழ் திரையுலகில் புதிய ட்ரெண்ட்டை உருவாக்கிய இப்படத்தில் நடிகர்கள் சித்தார்த், பரத், நகுல், தமன், மணிகண்டன் மற்றும் ஜெனிலியா நடித்து அசத்தியிருப்பர்.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை அறிமுக இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதற்கு தமன் இசையமைப்பார் என்றும் கூறப்பட்டு வந்தது. 'தமிழ் படம்' புகழ் CS அமுதனின் துணை இயக்குனராய் பணிபுரிந்தவர் மகேந்திரன் ராஜாமணி.

தற்போது இசையமைப்பாளர் தமன், தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சித்தார்த்துடன் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பாய்ஸ் படத்தின் இரண்டாம் பாக புகைப்படமா என்ற கேள்வியில் உள்ளனர் திரை ரசிகர்கள்.

90ஸ் கிட்ஸை கவர்ந்த இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்பது நலம்.