தமிழ் சினிமாவின் கிளாஸ் இயக்குனர் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். கொஞ்சம் காஃபி - கொஞ்சும் ஆங்கிலம், புத்தகம், கிட்டார், அழகான குடும்பம், அன்பான வார்த்தைகள், அண்ணா நகர் நண்பர்கள், லாஜிக்கான ஹீரோயிசம், உணர்வுபூர்வ உரையாடல் மற்றும் ஸ்டஃப்ஸ் இவையனைத்தும் ஓர் படத்தில் கொண்டு வர கௌதம் மேனனால் மட்டுமே முடியும் என்பதை தன் ஒவ்வொரு படங்களின் மூலம் நிரூபிப்பவர். 

Gautham Menons Enai Nokki Paayum Thotta Movie Release Date Update Revealed

காப் அணிந்த நாயகர்களும், காவியம் போல் திகழும் நாயகிகளும் இவர் படத்தில் மட்டுமே சாத்தியம் என்பதெல்லாம் நாம் அறிந்தவையே. இவர் இயக்கத்தில் வெகு நாட்களாக திரைக்கு வர காத்திருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ், சசிகுமார், வேல ராமமூர்த்தி போன்றோர் நடிக்கின்றனர். டர்புகா ஷிவா இசையமைப்பு பணிகள் செய்திருக்கிறார்.

Gautham Menons Enai Nokki Paayum Thotta Movie Release Date Update Revealed

தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஒன்றாக என்டர்டய்ன்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் தயாரிக்கும் இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.

Gautham Menons Enai Nokki Paayum Thotta Movie Release Date Update Revealed