ஆட்டோகிராஃப் , தவமாய் தவமிருந்து படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் சேரன்.கடந்த சில வருடங்களாக படங்கள் இயக்குவதற்கு Break விட்டிருந்தார்.இந்நிலையில் தனது அடுத்த படைப்பான திருமணம் படம் விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தார்

தம்பி ராமையாவின் மகனான உமாபதி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.சுகன்யா,மனோபாலா,எம்.எஸ்.பாஸ்கர் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் சேரனுடன் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து, யூ சான்றிதழ் பெற்றிருந்தது.தற்போது இந்த படம் மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.ரசிகர்கள் அனைவரும் சேரன் படத்தை மீண்டும் திரையில் பார்க்க ஆவலோடு காத்திருக்கின்றனர்.