மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ்.ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்து வருகிறார்.

Vijaysethupathi Starrer Super Deluxe Relese Date Officially Announced By the Production House

சமந்தா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.வேலைக்காரன் படத்தில் நடித்த மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் ரம்யா கிருஷ்ணன்,காயத்ரி,மிருணாளினி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Vijaysethupathi Starrer Super Deluxe Relese Date Officially Announced By the Production House

இந்த படத்தின் Second Look போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் First Look வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இரண்டாவது போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக போஸ்ட்டரோடு ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மார்ச் 29ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் விஜய்சேதுபதி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.