Breaking : விஸ்வாசத்தை தொடர்ந்து தளபதி 63 ! கெத்து காட்டும் KJR ஸ்டுடியோஸ்
By Aravind Selvam | Galatta | February 15, 2019 17:53 PM IST
தளபதி விஜய் நடிப்பில் AGS நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 63.தெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ மூன்றாவது முறையாக தளபதியுடன் இணைகிறார்.லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
கதிர்,விவேக்,யோகி பாபு,ஆனந்தராஜ்,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.கடந்த மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ,தளபதி 63 படத்தின் தியேட்டர் உரிமத்தை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை இதே நிறுவனம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
KJR ஸ்டுடியோஸ் தளபதி 63 படத்தை வாங்கியிருப்பது படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.இந்த படம் நிச்சயமாக தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.