தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் தளபதி 63 படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. 

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குனராக முத்துராஜ் தங்கவேல், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக் போன்றோர் பணியாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், இப்படம் பக்கா மாஸாக இருக்கும் என்றும் தெரிவித்தனர் படக்குழுவினர்.

தற்போது இப்படத்தின் போஸ்டர் வடிவமைக்கும் பணியை கோபி பிரசன்னா மேற்கொள்கிறார் என்ற தகவல் வெளியாகியது. கத்தி, தெறி, மெர்சல், சர்க்கார் படங்களை தொடர்ந்து தளபதி விஜய்க்கு 5-வது முறையாக போஸ்டர் வடிவமைக்கிறார்.