தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும்,தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் ஜோதிகா.கடந்த ஆண்டும் செக்கச் சிவந்த வானம்,காற்றின் மொழி,நாச்சியார் என வெற்றி படங்களை கொடுத்தார்.இதையடுத்து தற்போது ஜோதிகா சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

Breaking Details on Jyothika Starrer Raatchasi Movie Release Date

Dream Warrior Pictures தயாரித்துள்ள ராட்சசி என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை கௌதம்ராஜ் இயக்கியுள்ளார்.சீன் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் ஜோதிகா பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார்.

Breaking Details on Jyothika Starrer Raatchasi Movie Release Date

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தை ஜூலை 5ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Breaking Details on Jyothika Starrer Raatchasi Movie Release Date