2018-ல் உலக BoxOffice-ல் சக்கை போடு போட்ட திரைப்படம் Avengers Infinity War. Superhero படங்களை தயார் செய்யும் Marvel நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இந்த படம் இந்தியாவிலும் வசூலை அள்ளி குவித்தது. 

Marvel Superhero படங்களுக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழில் நல்ல வரவேற்பு கிடைப்பதை உணர்ந்த தயாரிப்பு நிறுவனம்,தற்போது பிரபல இயக்குனரான A.R.முருகதாஸை Avengers EndGame பதிப்புக்கு வசனம் எழுத ஒப்பந்தம் செய்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரின் வசனங்களில் வெளிவந்து ரமணா,கத்தி,துப்பாக்கி,சர்கார் போன்ற படங்களில் இவரது Sharp-ஆன வசனங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தமிழின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான முருகதாஸ் இந்த படத்திற்கு வசனம் எழுதுவது கூடுதல் பலம். மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே ஏப்ரல் 26ந் தேதி வெளியாகும் இந்த படம் வெறித்தனமான வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.