தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு பாணியில் இசையமைத்து அதில் வெற்றி கொடி கட்டியவர்களில் ஒருவர் இசையமைப்பாளர் டி.இமான். சமீபத்தில் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்திருந்தார் இமான். 

கனடாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற டொரண்டோ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக இருக்கை அமைப்பதற்கான நிதி திரட்டப்பட்டு வந்தது. அப்படி அமையவுள்ள தமிழ் இருக்கைக்கான தமிழ்தாய் வாழ்த்துப்பாடலுக்கு திரைப்பட இசையமைப்பாளர் இமான் இசையமைக்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் கனடா தமிழ் காங்கிரஸ் சார்பில் இமானுக்கு, `மாற்றத்திற்கான தலைவர் விருது' வழங்கி கௌரவித்தனர்.

தனது முழு உழைப்பு மற்றும் திறனால் உயர்ந்த இசை பிரியர் இமான் அவர்களை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.