24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடிகர் கதிரும், நடிகை சிருஷ்டி டாங்கேவும் இணைந்து நடிக்கும் படம் சத்ரு. நடிகர் கதிர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பரியேறும் பெருமாள். இப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பும் வாய்ப்பும் கிடைத்துள்ளது என்றே கூறலாம்.

Director Atlee To Release The Trailer Of Sathru Featuring Kathir And Srushti Dange In Lead

நவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில் உருவாகும் சத்ரு படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடித்திருக்கிறார். மேலும் இந்தப் படத்தில் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜாவாருணி, பவன் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். லகுபரன் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்திருக்கிறார்.

Director Atlee To Release The Trailer Of Sathru Featuring Kathir And Srushti Dange In Lead

தற்போது இந்த படத்தின் ட்ரைலரை இயக்குனர் அட்லீ வெளியிடுகிறார். அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் கதிர் நடிக்கிறார் என்பது நாம் அறிந்தவையே.

Director Atlee To Release The Trailer Of Sathru Featuring Kathir And Srushti Dange In Lead