லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வரும் நவம்பர் 29-ம் தேதி வெளியாகிறது 2.0. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஏமி ஜாக்சன் மற்றும் அக்ஷய் குமார் முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடிக்கும் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது.    

2Point0 Movie Production Lyca released 3D GIF Featuring Giant Robo

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 2.0 படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஆன்டனி எடிட்டிங் செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனிங் செய்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்பிலிருந்த இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி இணையத்தை அசத்தி வருகிறது.   

அழகான ஏமி ஜாக்சன் ஒருபுறம் தோன்ற மறுபுறம் அக்ஷய் குமார் ஆக்ரோஷமாக நடித்து ட்ரைலரில் தெறிக்கவிட்டிருக்கிறார். ரோபோட்டிக் பாணியில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களை மதன் கார்கி எழுதியுள்ளார். 

தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா 3டி GIF-ஐ ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் போருக்கு தயாராகுகள் என்று அறிவித்தது சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.