மகாமுனி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | August 20, 2019 16:13 PM IST
Studio Green நிறுவனத்தின் தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மகாமுனி.மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் ஹீரோயினாக மஹிமா நம்பியார் மற்றும் இந்துஜா நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சாபு ஜோசப் இந்த படத்திற்கு படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது இந்த படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.மௌனகுரு படத்தின் இயக்குனர் இந்த படத்தை இயக்குவதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
The much-awaited, gripping action thriller of #DirectorSanthakumar and @arya_offl - #Magamuni is all set for a worldwide release on 6th Sept. Catch the intense action in theatres near you!@Mahima_Nambiar @Actress_Indhuja @MusicThaman #TeamSG pic.twitter.com/Wx6d3nNLUa
— Studio Green (@StudioGreen2) August 19, 2019