துருவங்கள் பதினாறு,இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.அடுத்ததாக நடந்த பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்ற இவர் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமானார்.அடுத்ததாக யோகிபாபுவுடன் zombie,மஹத்துடன் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார்.

Yashika Aannand Zombie

Yashika Aannand Zombie

Zombie படத்தில் இவருடன் இணைந்து பரிதாபங்கள் புகழ் கோபி,சுதாகர்,Black Sheep குழுவை சேர்ந்த அன்பு,மனோபாலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.பிரேம்ஜி அமரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Yashika Aannand Zombie

Yashika Aannand Zombie

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் வரும் ஆகஸ்ட் 30 அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தில் இருந்து யாஷிகா ஆனந்தின் பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.