பிகில் பாடலின் அர்த்தம் இது தான் ! பாடலாசிரியர் விவேக் பதிவு
By Aravind Selvam | Galatta | September 22, 2019 18:55 PM IST
தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் சிங்கப்பெண்ணெ மற்றும் மாதரே பாடல்களின் விளக்கத்தை ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார்.அதற்கு பதிலளித்த விவேக் மாதரே ஒரு பெண்ணின் இயலாமையை கூறும் பாடல் என்றும் சிங்கப்பெண்ணெ பெண்ணின் எழுச்சி ஆகும் என்று விளக்கமளித்துள்ளார்.
மாதரே - ஒரு பெண்ணின் விரக்தியையும் இயலாமையையும் பிரதிபலிக்கும் பாடல்
சிங்கப்பெண்ணே - ஒரு பெண் தன் சுயம் உணர்தலும் எழுச்சியும் https://t.co/mcTgUAQqU0— Vivek Lyricist (@Lyricist_Vivek) September 22, 2019