அசுரன் படத்தின் வெற்றியை அடுத்து தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்து விட்டு சில நாட்களுக்கு முன் சென்னை திரும்பினார்.இதனை தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கும் பட்டாஸ் படத்தில் நடித்து வருகிறார்.

Pattas Release Not Postponed Pongal Release

இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.ஹீரோயினாக சினேகா,மெஹரீன் பிர்சாடா இருவரும் நடிக்கின்றனர்.பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Pattas Release Not Postponed Pongal Release

சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் இரண்டுஇறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.இந்த படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிகிறது.

Pattas Release Not Postponed Pongal Release

இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது என்றும் கார்த்திக் சுப்புராஜ்-தனுஷ் படம் இதற்கு முன் ரிலீசாகும் என்றும் சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது.இது குறித்து விசாரித்தபோது பட்டாஸ் படம் கண்டிப்பாக பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.மேலும் D40 படத்தின் ஷூட்டிங் இன்னும் 10-15 நாட்கள் இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.எனவே பட்டாஸ் திரைப்படம் கண்டிப்பாக திரைக்கு வரும் என்று தெரிகிறது.

Pattas Release Not Postponed Pongal Release