தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாகவும் ரசிகர்களின் உடன் பிறவா அண்ணனாகவும் விளங்குபவர் தளபதி விஜய். தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தின் ரிலீஸுக்கு காத்திருக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. வரும் 19-ம் தேதி இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கவுள்ளது. 

vijayandatlee

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் தளபதி 64 படத்தில் நடிக்கவிருக்கிறார். அக்டோபர் மாதத்தில் ஷூட்டிங் துவங்கவுள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது தெரியவந்தது.

lokeshkanagaraj

சில நாட்கள் முன்பு தளபதி 65 படத்தை இயக்குனர் பேரரசு இயக்கவுள்ளார் என்ற வதந்தி காட்டுத்தீ போல் பரவியது. இச்செய்தி முற்றிலும் தவறானது என்பது தெரியவந்தது. இணையத்தில் வரும் இதுபோன்ற செய்தியை நம்பவேண்டாம் என ரசிகர்களுக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

vijay