விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தை சதுரங்க வேட்டை,தீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார்.

Thala Ajith Thala 60

போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகவுள்ள தல 60 படத்தையும் வினோத் இயக்க,போனி கபூர் தயாரிக்கிறார்.தல 60 படத்தின் பூஜை ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறும் என்று போனி கபூர் தெரிவித்திருந்தார்.

Thala Ajith Thala 60

இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.தற்போது அஜித் இளமையான தோற்றத்தில் இருப்பது போல உள்ள புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இது தல 60 படத்திற்காக இருக்கலாம் என்று ரசிகர்கள் ஆனந்தத்துடன் உள்ளனர்.

Thala Ajith Thala 60