திரைத்துறையில் காமெடியனாக அறிமுகமாகி ஹிரோவாக உயர்ந்தவர் நடிகர் சந்தானம். இவர் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2 போன்ற படங்கள் நல்ல வசூல் மற்றும் பெயரை பெற்றுத்தந்தன. இறுதியாக வெளியான A1 திரைப்படம் சீரான வரவேற்பை பெற்றது. 

dakalty

dakalty

santhanam

santhanam

இதனைத்தொடர்ந்து டகால்டி எனும் படத்தில் நடித்து வருகிறார். தற்போது அந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ரித்திகா சென் நடித்து வருகிறார். இவர் ஒரு பெங்காலி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சந்தானமின் நண்பராக யோகிபாபு நடித்து வருகிறார். சந்தானமும் யோகிபாபுவும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்ளும் காட்சிகள் இந்த படத்தில் அதிகம் இடம்பெற்றுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றது.

santhanam

santhanam

santhanam

santhanam

18 ரீல்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்பி சௌத்ரி தயாரிக்கும் இந்த படத்திற்கு விஜய்நரைன் இசையமைக்கிறார். இதனைத்தொடர்ந்து சந்தானமின் தில்லுக்கு துட்டு 3 ரிலீஸ் பட்டியலில் உள்ளது.