அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து தற்போது ரிலீசாகியுள்ள படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Comali Paisa Note

Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கடந்த ஆகஸ்ட் 15 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Comali Shooting Spot

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.இவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்ற தகவல் நெருங்கிய வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comali Director