அசுரன் படத்தின் அசத்தலான இரண்டாம் லுக் போஸ்டர் !
By Sakthi Priyan | Galatta | August 22, 2019 18:00 PM IST
தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது. கலைப்புலி S தாணு இப்படத்தை தயாரிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைகிறார்.
தனுஷ் இரட்டை வேடமிட்டு நடிக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடிகர் கருணாஸ் மகன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது நாம் அறிந்தவையே. தனுஷ் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக தெரிகிறது.
அக்டோபர் 4-ம் தேதியன்று வெளியாகும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், அசுரன் படத்தின் ரெகார்டிங் மற்றும் பிற ஆடியோ பணிகள் முடிந்துவிட்டதாக சமீபத்தில் பதிவு செய்தார். மேலும் நடிகை அம்மு அபிராமி படத்தில் இணைந்தார்.
தற்போது படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியானது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் தனுஷ் ரசிகர்கள்.