ஸோயா ஃபாக்டர் படத்தின் நகைச்சுவை காட்சி வெளியானது !
By Sakthi Priyan | Galatta | September 15, 2019 13:19 PM IST
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சோனம் கபூர். நடிகர் துல்கர் சல்மானுடன் சேர்ந்து அசத்தும் படம் தான் இந்த ஸோயா ஃபாக்டர். அபிஷேக் ஷர்மா இயக்கத்தில் உருவான இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
ஜீ இசை நிறுவனம் இசை பணிகளை மேற்கொள்கிறது. இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், துல்கர் சல்மான் கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ஈர்த்து வருகிறது. லக்கி சார்ம், காஷ் பாடலை தொடர்ந்து பெப்சி கி கசம் பாடல் வீடியோ சமீபத்தில் வெளியானது.
தற்போது படத்தின் நகைச்சுவை காட்சி கொண்ட ப்ரோமோ வெளியானது. நடிகர் துல்கர் கைவசம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வான் போன்ற படங்கள் உள்ளது. இம்மாத இறுதியில் திரைக்கு வர காத்திருக்கும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.