தன்னுடைய வித்தியாசமான கதை தேர்வினால் தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்தவர் விஷ்ணு விஷால்.கடைசியாக இவரது சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து விக்ராந்துடன் இணைந்து விஜயசேதுபதி கதையெழுதும் படமொன்றில் நடித்து வருகிறார்.

Vishnu Vishal FIR

இதனை தொடர்ந்து இவர் FIR என்ற படத்தில் நடிக்கவிருந்தார்.விஷ்ணு விஷால் Fizal Ibrahim Raiz என்ற தீவிரவாதியாக தோன்றுவார் என்று தெரிகிறது.கெளதம் மேனனின் உதவியாளர் மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கவுள்ளார்.சுஜாதா என்டேர்டைன்மெண்ட்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

Vishnu Vishal FIR

மஞ்சிமா மோகன்,ரைசா வில்சன் மற்றும் ரெபா மோனிகா ஜான் மூவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கின்றனர்.இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது இதில் முக்கிய படக்குழுவினர் கலந்துகொண்டனர்.இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 11ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Vishnu Vishal FIR