விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் படம் சங்கத்தமிழன். இயக்குனர் விஜய் சந்தர் இந்த படத்தை இயக்குகிறார். படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள். 

vijaysethupathi

காமெடி வேடத்தில் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, எம்.பிரபாகரன் கலை பணிகளையும், அனல் அரசு சண்டைக்காட்சிகளையும், பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.

vijaychandar

தற்போது படத்தின் நாயகனான மக்கள் செல்வன் விஜய்சேதுபதி டப்பிங் பணிகளை முடித்து விட்டார். இச்செய்தி குறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் இயக்குனர் விஜய் சந்தர்.