அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் அவரது 33-வது படத்தின் படப்பிடிப்பு பழனியில் பக்தி பரவசத்துடன் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. 

vsp

தற்போது எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மகிழ் திருமேனி, விவேக் ஆகியோர் நடிக்கும் VSP33 படம், பழனியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கி வைத்தார்.

vijaysethupathi

kanika

தற்போது நடிகை கன்னிகா இந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்று தெரியவந்தது. 5 ஸ்டார், ஆட்டோகிராஃப், வரலாறு போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல். மக்கள் செல்வன் கைவசம் மாமனிதன், கா.பெ. ரணசிங்கம், துக்லக், கடைசி விவசாயி, சயீரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது.