தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி.தற்போது சங்கத்தமிழன்,லாபம்,VSP 33 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.சங்கத்தமிழன் படத்தை வாலு,ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.

Sangathamizhan Teaser

Sangathamizhan Vijaysethupathi

விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ்,ராஷி கண்ணா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.சூரி,ஸ்ரீமன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Sangathamizhan Vijaysethupathi

Sangathamizhan Shooting Spot

விஜயா ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முற்றிலும் நிறைவடைந்து விட்டது என்று படத்தின் இயக்குனர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.