கடந்த 2009-ஆம் ஆண்டு கபடி போட்டியை பிரதானப்படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் வெண்ணிலா கபடி குழு. இதன் இரண்டாம் பாகமான வெண்ணிலா கபடி குழு 2 படத்தை இயக்குனர் செல்வ சேகரன் இயக்கியுள்ளார். சுசீந்திரன் கைவண்ணத்தில் கதை களம் அமைந்துள்ளது. விக்ராந்த் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அர்த்தனா பினு நாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்தோஷ், பசுபதி, பரோட்டா சூரி, கிஷோர், கஞ்சா கருப்பு, அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

வெண்ணிலா கபடி குழு அணியின் முடிசூடா கபடி வீரராக விளங்கிய பசுபதியின் மகனாக வரும் விக்ராந்த் சொந்தமாக தென்றல் கேசட் கடையை நடத்தி வருகிறார். தொழில் ஒருபுறம் காதல் மறுபுறம் என இருந்தவர், தந்தையின் பிளாஷ்பேக்கை கேட்டு கபடி குழுவில் இணைய விரும்புகிறார். அங்கு நீண்ட நாட்கள் கழித்து பொலிவு பெரும் வெண்ணிலா கபடி குழுவில் எப்படி இணைகிறார், அணியை வெற்றி பெற வைக்கிறாரா என்பது தான் மீதி கதை.

தற்போது கபடி கபடி வீடியோ பாடல் வெளியானது. ஷங்கர் மஹாதேவன் பாடிய இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.