விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தை சதுரங்க வேட்டை,தீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார்.

Nerkonda Paarvai Shraddha Srinath

போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.வித்யா பாலன்,ஷ்ரத்தா ஸ்ரீநாத்,அபிராமி,டெல்லி கணேஷ்,ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Nerkonda Paarvai Ajith

இந்த படம் விமர்சகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது.தற்போது இந்த படத்தின் முக்கிய பாடலான வானில் இருள் என்ற பாடல் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்