முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட் சூட்டில் கலக்கும் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டடித்துக்கொண்டு இருக்கிறது.

Edappadi Palaniswami

Edappadi Palaniswami

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை ஈடுசெய்யும் நோக்கில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், லண்டனில் அவர் கோட் சூட்டு அணிந்து, அங்குள்ள பல்வேறு தொழில் முனைவோரைச் சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தங்களைச் செய்து வருகிறார்.

Edappadi Palaniswami

Edappadi Palaniswami

Edappadi Palaniswami

இதற்காக, முதலமைச்சர் அங்குள்ள குளிர் சூழல் மற்றும் அந்த நாட்டின் கலாச்சாரம் உடை அணிந்து, பல்வேறு தொழிலதிபர்களை அவர் சந்தித்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

Edappadi Palaniswami

Edappadi Palaniswami

Edappadi Palaniswami

Edappadi Palaniswami

முதலமைச்சர் பழனிசாமி அந்த புகைப்படங்களில் சினிமா ஸ்டைலில் இங்கிலீஸ் பட ஹீரோக்கள் போல் இருப்பதால், பார்ப்பதற்கு ரொம்பவே ரசிக்கும் படியாக அமைந்திருக்கின்றன. மேலும், இதுபோன்று கோட் சூட்டில் முதன் முதலாக முதலமைச்சர் படங்கள் வெளியாகி உள்ளதால், அந்த புகைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன.

Edappadi Palaniswami

Edappadi Palaniswami

Edappadi Palaniswami

Edappadi Palaniswami

குறிப்பாக, கோட் சூட்டுடன் முதலமைச்சர் படிக்கட்டுகளில் இறங்கி வரும் காட்சிகள் எல்லாம் “முதல்வன்” படத்தில் வரும் அர்ஜுனையும், இன்னும் சில படங்கள்.. கோட் சூட்டில் தோன்றும் ரஜினி, கமலையும், அஜித்தையும் நினைவுப்படுத்தும் படியாக அமைந்துள்ளன.

Edappadi Palaniswami

Edappadi Palaniswami

Edappadi Palaniswami

Edappadi Palaniswami

இதனிடையே, கோர்ட் சூட்டில் தோன்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள் குறித்து, பல்வேறு தரப்பினரும் பலவிதமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். இந்நிலையில், வழக்கம் போல் இணையதள வாசிப்பாளர்கள், அந்த புகைப்படங்களை வைத்து மீம்ஸ் கிரியேட் பண்ணி டிரெண்டாக்கி வருகிறார்கள். இதனால், அந்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Edappadi Palaniswami

Edappadi Palaniswami

“ஆயிரம் இருந்தாலும் பழனிசாமி தமிழகத்தின் முதல்வர். அவர் கோட் சூட் அணிவதைக் கேலியாகப் பார்க்க முடியாது” என்று நாம் தமிழர் சீமான் நேற்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.