லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் தளபதி 64. இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். டெல்லி கல்லூரியில் நடந்த படப்பிடிப்பில் VJ ரம்யா, 96 புகழ் கௌரி கிஷன், இணையதள புகழ் பிரிகிடா போன்றோர் நடித்தனர். 

thalapathy64 vijaysethupathi

ஷிமோகாவில் நடக்கும் படப்பிடிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்து கொண்டார் என்ற தகவல் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் விஜய்சேதுபதி அரசியல் வாதியாக நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது. 

thalapathy64

படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் தளபதி ரசிகர்கள். மாநகரம், கைதி படத்தை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெற லோகேஷ் கனகராஜை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது கலாட்டா.