பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகியுள்ள தர்பார் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார்.லைகா ப்ரொடுக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பொங்கல் 2020 அன்று வெளியாகவுள்ளது.

Thalaivar168 Officially Announced SunPictures Siva

இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Thalaivar168 Officially Announced SunPictures Siva

எந்திரன்,பேட்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைகிறது.தலைவர் 168 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்.இந்த படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Thalaivar168 Officially Announced SunPictures Siva