லைக்கா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சயீஷா மற்றும் பிரேம், சமுத்திரக்கனி, பூர்ணா, போமன் இரானி, ஆர்யா நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர். பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 20-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 

suriya

இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன் நடிப்பில் உருவாகியுள்ள ஒத்த செருப்பு சைஸ் 7 படமும் செப்டம்பர் 20-ம் தேதி வெளிவரவுள்ளது. இது குறித்த பதிவினை ட்விட்டரில் பகிர்ந்தார் பார்த்திபன். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

parthiban

parthiban

ஏற்கனவே பார்த்திபன் உருவாக்கிய கதை திரைக்கதை வசனம் மற்றும் சூர்யாவின் அஞ்சான் படங்கள் ஒரே நாளில் வெளிவந்தது என்பது கூடுதல் தகவல்.