இறுதிசுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா துணை தயாரிப்பாளராக பணிபுரிகிறார்.

sooraraipottru

ஓ.பி. ஜிந்தால் விமான நிலையத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், படக்குழுவினர் சென்னை திரும்பியதாகவும் தகவல் வெளியானது. முதல் லுக் போஸ்டரிலே விமானம் கொண்டுள்ளதால், படத்தின் முக்கிய காட்சிகளை இங்கு படமாக்கியிருக்கலாம் என்ற கருதப்படுகிறது. பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் நடிக்கவுள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.

suriya

தற்போது வெளியான தகவல் என்னவென்றால், சூரரைப் போற்று படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு முடிந்துவிட்டதாம். நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.