தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இன்று நேற்று நாளை இயக்குனர் ராம்குமாருடன் SK 14,இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் ஹீரோ மற்றும் இயக்குனர் பாண்டிராஜுடன் நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்து வருகிறார்.

SK Namma Veettu pillai

பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் நம்ம வீட்டு பிள்ளை படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

SK Namma Veettu pillai

யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி,மீரா மிதுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு 95% நிறைவடைந்து விட்டது.

SK Namma Veettu pillai

ஒரே ஒரு பாடல் மட்டும் இன்னும் படமாக்கப்பட உள்ளது என்று தகவல் கிடைத்திருந்தது தற்போது இந்த படத்தின் காந்தகண்ணழகி என்ற பாடலின் ஷூட்டிங் ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது.இதனை படத்தின் நாயகி அணு இம்மானுவல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இந்த பாடலுடன் இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடையும் என்று தெரிகிறது.

SK Namma Veettu pillai