பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சசி அடுத்ததாக இயக்கிய படம் சிவப்பு மஞ்சள் பச்சை.இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்திருந்தனர். 

gvprakashkumar

gvprakashkumar

அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இந்த படத்தில் சித்தார்த் டிராஃபிக் போலீஸாகவும், ஜீ.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருந்தார். துவக்கம் முதலே பாடல்கள் படத்திற்கு வலு சேர்த்தது. இப்படம் இம்மாதம் செப்டம்பர் 6-ம் தேதி வெளியானது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் திரை விரும்பிகள்.

sivappumanjalpachai

gvprakashkumar

தற்போது படத்தின் இதுதான் வீடியோ பாடல் வெளியானது. நரேஷ் ஐயர் மற்றும் சாஷா திரிப்பதி இந்த பாடலை பாடியுள்ளனர். மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.