இயக்குனர் ஹலீதா ஷமீம் இயக்கத்தில் நடிகர் சமுத்திரகனி மற்றும் சுனைனா நடிக்கும் படம் சில்லுகருப்பட்டி. பூவரசம் பீ பீ எனும் படத்தை இயக்கிய ஹலீதாவின் இரண்டாம் படம் இது. இப்படத்தில் சாரா அர்ஜுன், நிவேதிதா சதீஷ், மணிகண்டன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் ஓகே கண்மணி பட புகழ் லீலா சாம்சன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

sillukarupatti

சுவாரஸ்யம் என்னவென்றால், படத்திற்கு நான்கு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றிருக்கிறார்கள். மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் ஆகியோர் தங்களது திறமையை வெளிப்படுத்தியிருக்கின்றனர். படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்கிறார்.

sillukarupatti

சமீபத்தில் இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி அனைவரையும் ஈர்த்தது. தற்போது சில்லுகருப்பட்டி படத்தின் திரையரங்க உரிமையை சூர்யாவின் 2டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.