உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், வித்யுத் ஜம்வால் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். 

shankar

ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி மேக்கப் டெஸ்ட் மற்றும் படம் எடுத்தனர். அந்த தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் லுக் வெளியானது, சேனாபதியை மீண்டும் கண்ட ரசிகர்கள் தெம்புடன் வரவேற்றனர்.ரத்னவேல் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக என்ற தகவல் சமீபத்தில் தெரியவந்தது.

shankar

தற்போது சென்னை T-நகரில் உள்ள ஹோட்டலில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. உலகநாயகன் ஒருபுறம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக இருந்தாலும், இந்தியன் 2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்க்கு முன் ஹைதெராபாத்திலும், சென்னை கோட்டூர்புரத்திலும் சில காட்சிகள் எடுக்கப்பட்டது.

indian2